பொள்ளாச்சி சார் ஆட்சியராக எஸ்.பிரியங்கா பொறுப்பேற்றார்
பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி சார் ஆட்சியராக எஸ்.பிரியங்கா ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருவாய் கோட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட தாலுகாக்களை உள்ளடக்கியது. இந்த வருவாய் கோட்டத்தில் சார் ஆட்சியராக கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த தாக்கரே சுபம் ஞானதேவராவ், தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து டெல்லியில் பயிற்சி பெற்ற எஸ்.பிரியங்கா ஐஏஎஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியராக இன்று பொறுப்பேற்றார்.