TNPSC குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றி வெளியான தகவல்!
ஆகஸ்ட் 01.,
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக, TNPSC குரூப் 4 தேர்வு, கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வு எழுதியவர்கள், காத்து கொண்டிருக்கும் நிலையில், இந்த தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி வரும் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
TNPSC குரூப் 4 கட் ஆப்:
தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 7,301 காலிப் பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 தேர்வானது, கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது. மேலும், தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள் மற்றும் 316 தாலுகா மையங்களில் உள்ளது. இதில், 7,689 தேர்வு மையங்களில் TNPSC குரூப் 4 தேர்வானது நடத்தப்பட்டது. இந்த தேர்வில் சுமார் 18 லட்சம் பேர் எழுதினார்கள்.
இந்நிலையில், சென்ற ஆண்டுகளை போல இல்லாமல், இந்த ஆண்டு தேர்வுக்கான வினாக்கள் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். மேலும், தேர்வு எழுதிய பலர் தேர்வு முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், TNPSC குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்று தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்த தகவல், தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 160-க்கும் மேலும், BC பிரிவினருக்கு 157-க்கும் இருக்கும் எனவும் மேலும், MBC பிரிவினருக்கு 155-க்கு மேலும், SC பிரிவினருக்கு 151-க்கு மேலும், BCM பிரிவினருக்கு 148-க்கு மேலும், SCA பிரிவினருக்கு 145-க்கு மேலும், ST பிரிவினருக்கு 135-க்கும் மேலும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, இந்த ஆண்டு 5 மதிப்பெண்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகளுக்கு 140 – 145 என்ற அளவிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு 130-140 என்ற அளவிலும் கட் ஆஃப் இருக்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. TNPSC குரூப் 4 தேர்வில் மொத்தம் 200 கேள்விகளுக்கு, எத்தனை வினாக்கள் சரி என்ற அடிப்படையில் இந்த கட் ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.