திருப்பூர் மாநகர காவல் ஆணையராக எஸ்.பிரபாகரன் ஐபிஎஸ் நியமனம்
ஆகஸ்ட் 02.,
திருப்பூர் நகரின் புதிய காவல் ஆணையராக எஸ்.பிரபாகரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தற்போது சென்னை சென்னை கிழக்கு மண்டல் கூடுதல் ஆணையராக உள்ள எஸ்.பிரபாகரன் ஐபிஎஸ் தற்போது ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதையடுத்து, தற்போதைய திருப்பூர் நகர காவல் ஆணையராக இருந்த பாபு ஐபிஎஸ் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதனால், திருப்பூர் நகர காவல் ஆணையராக எஸ்.பிரபாகரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திருப்பூர் நகர காவல் ஆணையராக எஸ்.பிரபாகரன் ஐபிஎஸ் ஓரிரு நாட்களில் பொறுப்பு ஏற்பார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதிதாக திருப்பூர் நகர காவல் ஆணையராக பொறுப்பேற்க உள்ள எஸ்.பிரபாகரன் ஐபிஎஸ் அவர்களுக்கு தமிழக வேங்கை வெற்றி மாத இதழ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.