களம் காணும் கலைச்செல்வி
பொள்ளாச்சி ஆகஸ்ட் 11.,
கோவை மாவட்டம், ஆனைமலை பேரூராட்சியில் வீதி வீதியாக சென்று களப்பணியாற்றும் பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார்.
கோவை மாவட்டம், ஆனைமலை பேரூராட்சியில் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தலைவராக நான் பொறுப்பேற்றிலிருந்து, சாக்கடைகள் சீரமைப்பு, சாலைகள் சீரமைப்பு, பொதுக் கழிப்பிடங்கள் சீரமைப்பு, ஆற்றங் கரையோர பகுதிகளில் சுத்தம் செய்தல், தினம் தினம் வீடுகளில் இருந்து மக்கள் தரும் குப்பைகளை தரம் பிரித்து, இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் போன்றவற்றின் சுற்றுப்புறங்களில் தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளை வீதி வீதியாக சென்று தானே முன்நின்று பணிகளை சீரமைப்பதில் களத்தில் கலக்கும் கலைச்செல்வியாக மக்கள் பணியாற்றுகிறார்.
மேலும், பொதுமக்கள் கூறும் குறைகளை பணிவாக கேட்டு உடனே தீர்வுகாணுவும் செய்கிறார். ஆனைமலை முழுவதும் வரும் கழிவு நீரை மறுசுழற்சி செய்வதற்கான இடங்களை தேர்வு செய்து பணிகளை விரிவுபடுத்தி வருகின்றார் பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார்.
வீடுகளில் இருந்து மக்கள் தரும் குப்பைகளை, மக்கும் குப்பை மக்காத குப்பைககளை தரம் பிரிப்பது எப்படி என்பது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி, மேலும் பொதுமக்கள், தாங்களாகவே எப்படி இயற்கை உரம் தயாரிக்க வேண்டும், எவ்வாறு இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கி கூறுகிறார்கள். அப்படி, நேரடியாக கழிவுகளுடன் செடிகள் வளர்ந்து பயிரிடும் நபர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று கூறியதோடு, நம் பூமியை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை தெரிவித்துள்ளார்கள்.
மேலும், நமது கழிவுகளை அப்புறப்படுத்தும், நம் துப்புரவு பணியாளர்களும் மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து, துப்புரவு பணியாளர்கள் அச்சமில்லாமல் குப்பைகளை எடுக்கும்படியாக, குப்பைகளை தரம்பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறார்கள்.
ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு கவுன்சிலர்களும் தலைவருடன் ஒன்றிணைந்து சிறப்பான பேரூராட்சியாக தமிழகத்தின் முன்மாதிரி பேரூராட்சியாக மாற்றும் பணிகளில் செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தின் முன்மாதிரி பேரூராட்சியாக ஆனைமலை பேரூராட்சி தமிழக அரசின் விருதைப் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை.
இதுகுறித்து பேரூராட்சி தலைவரிடம் பேசியபோது, நான் மக்கள் பணியாற்றும் பேரூராட்சி சிறப்பானதாக இருக்கவேண்டும். எனக்கு முன்னாள் மக்கள் பணியாற்றிய தலைவர்கள் அன்றைய நிதிகளை கொண்டு, இந்த பேரூராட்சியை வளர்ச்சியடைய செய்திருந்தாலும், இன்னும் தேவைகள் இருக்கிறது.
ஆனைமலையை பொறுத்தவரை குப்பையில்லா வீதிகள், சுத்தமான குடிநீர், சாலைகளை சீரமைப்பு, உயர் படிப்பிற்கான கல்லூரி உருவாக்கப்படவேண்டும், அரசு பள்ளிகளை சீரமைக்க வேண்டியிருக்கிறது. ஆற்றங்கரையை சுத்தப்படுத்தி படகு இல்லம் கொண்டுவரவேண்டும். கழிப்பிட வசதிகள் இல்லாத வீடுகளில் கழிப்பிட வசதி உருவாக்க வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். நமது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூறும் அறிவுரைகளை சரியாக பின்பற்றுகிறேன். தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட நிதிகளை சரியாக பயன்படுத்தி பேரூராட்சியை, மேலும் வளர்ச்சியடைய செய்துவது எங்கள் நோக்கம் என்று கூறினார்.
வலைத்தளங்களில் வாழ்த்து
மேலும், நாளை பிறந்தநாள் காணும் ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமாருக்கு மக்கள் வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.