கும்கி யானைகளின் மீது செஸ் போர்டு வடிவ போர்வை போல் போர்த்திய ஃபிளக்ஸ் விவகாரம்: வனத்துறை முதன்மை செயலாளர் வருத்தம்...
பொள்ளாச்சி ஆகஸ்ட் 11.,
பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில் கும்கி யானைகளின் மீது செஸ் போர்டு வடிவ போர்வை போல் போர்த்திய ஃபிளக்ஸ் கவர் விவகாரத்தில், வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ அவர்கள் நடந்த நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பழங்குடிகள் தினம் மற்றும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நாளான ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப் ஸ்லிப் பகுதியில் வன அலுவலகத்தில் செஸ் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் துவக்கி வைத்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் அவர்களால் ஆன ஃபிளக்ஸ் கவரை கும்கி யானைகள் மீது போர்வை போல் பொருத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், கும்கி யானைகளை துன்புறுத்தி பிளாஸ்டிக் கவர்களை யானைகள் மீது பொருத்தி கும்கி யானைகளை விளம்பர காட்சி பொருளாக்கிய சம்பவம் வன ஆர்வலர்களால் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, வன ஆர்வலர்களின் ஆதங்கங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதைப் பார்த்த பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. நமது வேங்கை வெற்றியும் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் சுப்பிரியா சாஹூ இ.ஆ.ப., அவர்கள் வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அவர் வெளியிட்டிருந்த பதிவில், இதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. விலங்குகளை காட்சிப் பொருளாகப் பயன்படுத்த முடியாது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள குழுவினர் தங்கள் உற்சாகத்தால் எல்லை மீறி சென்றுள்ளனர். இதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம் மேலும் இது மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வோம் பதிவிட்டிருந்தார்.
https://twitter.com/supriyasahuias/status/1557158347362947072?s=20&t=YOVUTZX37_8YL0g3Sv3REg
யானை முகத்தில் ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து தொந்தரவு செய்யாதீர்கள். தயவு செய்து காட்டுயிர்களை துன்புறுத்தாதீர்கள்.