பொள்ளாச்சி-ஆக-1
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பகுதியில் காட்டு யானை, மான், புலி, சிறுத்தை மற்றும் அபூர்வ பறவை இனங்கள் உள்ளன.
ஆழியார் வழியாக வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளில் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இதை அடுத்து வால்பாறையில் இருந்து சுற்றுலா பயணி காரில் வரும்பொழுது காண்டூர் கனால் மேல்புற பகுதியில் கரடி ஒன்று செல்வதை தனது மொபைல் போனில் படம் பிடித்துள்ளார்.
தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் கரடி நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.