பொள்ளாச்சி ஆகஸ்ட் 21.,
ஆனைமலை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை மற்றும் கற்பகம் மருத்துவமனை சார்பில், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் குறித்த பரிசோதனைகள் ஆனைமலை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இலவச பொது மருத்துவ முகாம் 21-08-2022 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 9:30 முதல் மணி மதியம் 3 மணி வரை நடைபெற்றது.
முகாமை ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் துவங்கி வைத்தார். முன்னாள் ஆனைமலை பேரூராட்சி தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார் முன்னிலை வகித்தார். மேலும், ஆனைமலை பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா.வெற்றிவேல் மற்றும் அறங்காவலர்கள் எம்.கவிதா, பெ.ஆனந்தகுமார், கே.மைதிலி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
மேலும் கி.பிரகாஷ், எஸ்.முருகானந்தம், த.ராஜேஷ்குமார், எஸ்.மோகன்ராஜ், எஸ்.சுந்தரவடிவேல், பிரேமா ஆகியோர் முகாம் ஆலோசனை குழுவில் ஈடுபட்டனர்.
முகாமில் பொது அறுவை சிகிச்சை சம்பந்தமான பரிசோதனைகள், மகளிர் மருத்துவம் சம்பந்தமான பரிசோதனைகள், கண் சம்பந்தமான பரிசோதனைகள் மற்றும் பொது மருத்துவம் குறித்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இந்த இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உடல் நலன் குறித்த பரிசோதனை செய்து கொண்டு மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்று சென்றனர்