Type Here to Get Search Results !

இன்று உலக யானைகள் தினம்: யானைகளை காப்போம்... இயற்கையை ரசிக்கும் பேர்வழிகளா நீங்கள் -அரிமா கமலக்கண்ணன் பொள்ளாச்சி

இன்று உலக யானைகள் தினம்: யானைகளை காப்போம்... இயற்கையை ரசிக்கும் பேர்வழிகளா நீங்கள் -அரிமா கமலக்கண்ணன் பொள்ளாச்சி 



பொள்ளாச்சி ஆகஸ்ட் 12.,

               யானைகளை காப்போம்... காடுகளை காப்போம்... நல்ல தலைப்புதான்  தான். ஆனால், இந்த காடுகளை காக்கும் (வளர்க்கும்) யானைகளை காப்பது நம்ம கடமை. உண்மைதான். ஆனால், இயற்கையை ரசிக்கிறோம் பேர்வழிகள் அப்படிங்கறது போல வனத்துக்குள் செல்லும் சில பேருக்குதான் இந்த பதிவு. 



           வனத்தில் கம்பீரமா இருக்கிற நம்ம யானையார் பற்றிதான் பேசப்போறோம்.  அதுவும் யானையாரின் பாதத்தை பற்றித்தான் இந்த பதிவு. அவ்வளவு பெரிய யானையாக இருந்தாலும், அதன் கால் பாதம் பஞ்சு மெத்தை (ஸ்பான்ச் பில்லோ ) மாதிரி தான் மென்மையா இருக்கும். இயற்கையை உற்சாக பானத்தோடு தான் ரசிப்பேன் என்பவர்களுக்கு தான் இந்த செய்தி. மது குடிக்கும் உற்சாகத்தில், வீட்டுலேயும் காட்டிலேயும் மது குடித்துவிட்டு நீங்கள்,   வீசும் பாட்டில் உடைந்து அந்த கண்ணாடி சில்லுகள்,  இந்த வாயில்லா ஜீவன்கள் பாதிக்கப்படுகிறது. 



            அந்த வாயில்லா ஜீவன்களின் கால்லில் கண்ணாடி சில்லுகள் குத்தி, நடக்கமுடியாமல் அவைகள் படும்பாடு கண்ணிலில் பார்க்கமுடியவில்லை. காட்டு விலங்குகளின்  நடையின் மாற்றத்தை வைத்து, அவைகளின் பாதங்கள் பாதித்திருக்கிறது என்று வேட்டைத் தடுப்பு காவலர்கள், வன காவலர்கள், வனக் காப்பாளர்கள்   கண்டுபிடித்து கண்ணாடி சில்லுகளை எடுக்கலாம். 



அப்படியே, அந்த கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு  வைத்தியம் கொடுத்து சரி செய்கிறார்கள். ஆனால், மது பாட்டில்களில்  பழுப்பு நிற பாட்டிலாக இருந்தால், கண்ணாடி சில்லுகளை எடுக்க முடியும். ஆனால், வெள்ளை நிற பாட்டிலாக இருந்தால், விலங்குகளின் பாதங்களில் உள்ள போனதே தெரியாது. விலங்குகள் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும். வனத்திற்குள் செல்பவர்கள் இனியாவது மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால் குறைந்தபட்சம் அந்த பாட்டில்களை காட்டுக்குள் வீசாமல் இருங்கள். அதுவே வனவிலங்குகளுக்கு நீங்கள் செய்யும் பெரும் தொண்டு. 


                                        அரிமா கமலக்கண்ணன் பொள்ளாச்சி 


                    அந்த காட்டு விலங்குகள் மிகவும் அன்பானவை. எந்தவொரு காட்டு யானையும், அதனுடைய எல்லையை தாண்டி வந்து யாரையும் துரத்தாது.  அவைகள் கூட்டமாக போகும்போது தங்கள் பாதுகாப்புக்காக பிளிறும் தானே ஒழிய, அதுவும் இடைவெளியில் வரை வந்து துரத்திவிட்டு திரும்ப போய்விடும். உங்களை துரத்தி கொண்டே வீடு வரைக்கும் வராது. 



                             ஆனால் நாம், யானைகளை  எவ்வளவு சிரமப்படுத்துகிறோம். செல்பி எடுப்பது, அதிக சத்தம் போடுவது, காட்டு யானைகளுக்கு கோபத்தை தூண்டி விடுவது, இப்படி எல்லாம் செய்வது நாம்தான். இப்படி எல்லா கொடுமையும் செய்துவிட்டு, காட்டு விலங்குகளை ஒரு  உயிர் கொல்லி விலங்காக மாற்றுவதும் நம்மதான்.  



                  நீங்கள் காட்டுக்குள் போகவேண்டாம் என்று நான் சொல்லவில்லை,  காட்டுக்குள்ள போங்க... இயற்கையின் அழகை ரசிங்க, சந்தோஷமா நீங்களும் இருக்கணும், காட்டு விலங்குகளும் சந்தோசமா வாழும்படி நாமும் நடந்து கொள்ளவேண்டும். 



                      மது பாட்டில்களை வனத்துக்குள் உடைத்து போட்டு,  அந்த விலங்குகளை ரொம்ப காயப்படுத்தாதீங்க, நோகடிக்காதீங்க. கண்ணாடி சில்லுகளால் சிறுத்தை, புலிகள் விலங்குகளுக்கு காயம் ஏற்பட்டால், அவைகள் எப்படி ஓடி வேட்டையாடமுடியும் என்பதை சிந்திக்க வேண்டும். 

அரிமா கமலக்கண்ணன் பொள்ளாச்சி 


                                தயவுசெய்து நண்பர்களே! நீங்கள் வனத்துக்குள் செல்லும்போது, மது பாட்டில், வாட்டர் பாட்டில், கண்ணாடி பாட்டில் பிளாஸ்டிக் போன்றவைகளை காட்டுக்குள் போடாதீர்கள். அந்த காட்டை  அசுத்த படுத்தாதீர்கள். இயற்கை ரசிக்கிறேன் என்று  சொல்லிட்டு தயவு செய்து, இந்த மாதிரியான கொடுமைகளை செய்யாதீங்க. இதுவே காட்டுயிர்களுக்கு நீங்கள் செய்யும் பெரும் தொண்டு 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies