NPSC Group 4, VAO தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றார்கள். தற்போது, தேர்வின் பாடத்திட்டங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.
TNPSC குரூப் 4 மற்றும் VAO :
தமிழ்நாட்டில் 2022-ஆம் ஆண்டு தொடங்கியது முதலே அரசுத்துறையின் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தேர்வு எழுதுபவர்கள் எதிர்பார்த்த குரூப் 2, 2A தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை TNPSC தேர்வாணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதில், மே 21ஆம் தேதி சனிக்கிழமை தேர்வு நடைபெறும். பிப்ரவரி 23 முதல் மார்ச் 23-ஆம் தேதி வரை குரூப் 2, 2A தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து TNPSC குரூப் 4 மற்றும் VAO தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியானது.
நடைபெற்ற TNPSC குரூப் 4 மற்றும் VAO தேர்வானது. இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. நடைபெறவுள்ள தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 28-ஆம் தேதி நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குரூப் 4 தேர்வானது, ஒரே ஒரு எழுத்து தேர்வை மட்டும் அடிப்படையாகக் கொண்டது. இதில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படுகிறது.
இதையடுத்து, ஒவ்வொரு வினாக்களுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் இருக்கும். இந்த இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதியில் 100 வினாக்கள் இடம்பெறும். இலக்கியம், தமிழ் இலக்கணம், தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் வினாக்கள் இடம்பெறும். அடுத்ததாக, 25 திறனறி தேர்வு வினாக்களும் 75 மதிப்பெண்களுக்கு பொது அறிவு வினாக்கள் இடம் பெறும். மேலும், அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பிரிவுகளிலிருந்து வினாக்கள் இடம் பெறும். மேலும், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம் நடப்பு நிகழ்வுகள், ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும்.