TN TRB தேர்வு: விண்ணப்பித்தோர் கவனத்திற்கு... TET பாடத்திட்டத்தை டவுன்லோட் செய்வது எப்படி?
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான TET பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் TRB வெளியிட்டுள்ளது. இதையடுத்து தேர்வு முறைகள், வயது வரம்பு , கல்வி தகுதிகள் குறித்த முழு தகவல்களை இப்பதிவில் காணலாம்.
TN TET:
தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர் காலியிட பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கு பிறகு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக TET தேர்வு நடைபெறவில்லை. ஆனால், தற்போது TNPSC அரசு போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆசிரியர் தேர்வு வாரியமும் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே, கடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 7ஆம் தேதி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தத் தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கானது DTED கல்விதகுதி பெற்றவர்கள் இத்தேர்வில் எழுதலாம். இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்கள் எழுத கூடிய தேர்வாகும். ஆசிரியர் பயிற்சியில் (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். கடந்த மார்ச் 7ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு முடிவடைந்துள்ளது. இந்தநிலையில், தேர்வு குறித்தன தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தகுதி வாரியம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம், இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை ttp://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பேப்பர் 1-ல் 1 முதல் 5-ஆம் வகுப்புக்கான பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. சைல்டு டெவலப்மெண்ட் 30 மார்க், மொழிப்பாடம் 130 மார்க், மொழிப்பாடம் 230 மார்க், கணக்கு 30 மார்க், எண்விரல் மண்டல் ஸ்டடீஸ் 30 மார்க் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும்.