Type Here to Get Search Results !

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க! #Family_Card #Ration_Card #VengaiVetri

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!


தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுக்கு பதிவு செய்வது மிகவும் எளிதாகி விட்டது. மேலும், இதனை ஆன்லைனில் நீங்களே அதற்கான செயல் முறையை செய்யலாம். இதுகுறித்த முழு விவரத்தையும் கீழே இந்த தொகுப்பில் பார்ப்போம்.


ரேஷன் கார்டு:

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை தற்போது ஒரு வாழ்வாதாரமாக மாறி விட்டது. மேலும், ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களை வைத்துதான், சாமானிய மக்கள் தங்களின் குடும்பங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, தமிழக அரசும் பல நன்மைகளை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டை  வாட்டி வதைத்த கொரோனா பரவலின் போது, ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு ரூபாய் 2,000 பணம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பொங்கல் பரிசும் வழங்கப்பட்டது. அடுத்தாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்க இருப்பதாக தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டு உள்ளது.


இந்தநிலையில், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் திடீரென தங்களது ரேஷன் கார்டுகளை தொலைத்து விட்டால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? உடனடியாக ஆன்லைனில் ஈசியாக விண்ணப்பிப்பது எப்படி என்பதை, கீழே விவரமாக பார்க்கலாம். ரேஷன் கார்டு தொலைத்தவர்கள் கையில் செல்போன் இருந்தால் மட்டும் போதும், இந்த வேலையை வெறும் 20 நிமிடத்தில் முடித்து விடலாம். அதற்கான படிகளாக, தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tnpds.gov.in/ சென்று லாகின் செய்யவேண்டும். அதனைத் தொடர்ந்து, இப்போது, பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம், ஒரு ஒடிபி எண் வரும். அதனைக் கொண்டு சுயவிவர பக்கத்திற்கு உள்நுழையவும்.


'TNPDS' ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான டேப்-ஐ பார்ப்பீர்கள். இதில், மேலும் கூடுதல் வசதிகளான பெயர் நீக்குதல், மாற்றுதல், சேர்த்தல் போன்ற வசதிகளையும் கொண்டிருக்கிறது. மேலும், அதில் உங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுத்து அதன் பின்பு PDF ஃபைலை சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்யவேண்டும். அதன்பிறகு அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். இதையடுத்து, தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று, இந்த நகலை சமர்ப்பித்தால் போதும், தங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற ஹெல்ப்லைனில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies