தனிநபர் கடன் குறைந்த வட்டியில் தரும் வங்கிகளின் பட்டியல் – EMI குறித்த முழு தகவல்கள்
இந்தியாவில் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தனிநபர் கடன் பெறுவோர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தனிநபர் கடன் கொடுக்கும் வங்கிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தனிநபர் கடன்:
இந்தியாவிலுள்ள வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனைகளை தாண்டி, பல்வேறு கடன்களையும், வழங்கி வருகிறது. அந்தவகையில் வாகனக் கடன், நகைக் கடன், வீட்டுக் கடன் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இதில், 2019-ஆம் ஆண்டு நிதியாண்டில் ரூ.75,088 கோடி அளவில் இருந்த, தனிநபர் கடன் தற்போது 1,47,236 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு எல்லாம், நாம் தனிநபர் கடன் பெறுவதற்கு, வங்கியை தேடி செல்லும் நிலை அல்லது வங்கியின் பிரதிநிதி ஒருவர் நம்மை நேரில் பார்த்து விசாரணை செய்து, விண்ணப்பத்தை பரிசீலனை செய்யும் முறையில் இருந்து வந்தது.
ஆனால், தற்போது வங்கி சார்ந்த அனைத்து வேலைகளும் டிஜிட்டல் முறையில் நடைபெற்று வரும் நிலையில், ஆன்லைன் மூலமாக தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது, ஹெச்டிஎஃப்சி ( HDFC ) வங்கி 10.25% தனிநபர் கடன் வழங்குகிறது. இந்த வாங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரையிலான தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்து, டாடா கேபிடல் வங்கியில் 10.99 சதவீதத்திலிருந்து கடன் வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் கடன் பெற்றீர்கள் என்றால் (EMI ) தொகையாக ரூ.2,174 வசூல் செய்யப்படும்.
அதேபோல, ஆக்சிஸ் வங்கியில் 10.25% சதவீத வட்டியில், ஒரு லட்சம் ரூபாய்க்கு ரூ.2,137 ஈஎம்ஐ (EMI ) தொகையாக செலுத்த வேண்டும். பஜாஜ் பின்சர்வ் வங்கியில் 1 லட்சம் கடன் தொகைக்கு 13% வட்டி கணக்கிடப்படுகிறது. கோடக் மஹிந்திரா வங்கியில் 10.25% சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. ரூ.25 லட்சம் வரையிலும் கடன் தொகை வழங்கப்படும். எஸ்பிஐ வங்கி 9.60% சதவீதம் முதல் 13.85% சதவீத வட்டியில் கடன் வழங்குகிறது. அதே போல இண்டஸ்லேண்ட் வங்கி, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் போன்ற வங்கிகளும் தனிநபர் கடன்களை வழங்குகிறது.