ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி – எளிய வழிமுறையில் போட்டோவை மாற்றும் வசதி !
ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி – உங்கள் போட்டோவை எளிதில் மாற்றும் வழிமுறைகள் !
Aadhar Card தற்போது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகி விட்டது. நம்முடைய பயோமெட்ரிக்ஸின் ஆதார் கார்டில் அங்கீகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கிய தனிப்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் உங்கள் புதிய போட்டோவை மாற்ற செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்ப்போம்.
உங்கள் புகைப்படத்தை ஆதார் கார்டில் மாற்றம் செய்ய:
உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் உங்கள் தனிப்பட்ட விவரங்களில் எதாவது மாற்ற வேண்டுமென்றால், நீங்கள் UIDAI-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும். அதில் உங்களின் பெயர், உங்கள் முகவரி, உங்கள் மொபைல் எண், உங்கள் புகைப்படம் மற்றும் உங்கள் இமெயில் ஐடி தொடர்பான தகவல்களை நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் கார்டில் உள்ள உங்கள் புகைப்படத்தை மாற்ற நீங்கள் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டியதிருக்கும். இப்போது வீட்டில் இருந்தபடியே உங்கள் புகைப்படத்தை மாற்ற பல வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும், ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்ற விரும்பினால், முதலில் UIDAI-வின் அதிகாரபூர்வ வெப்சைட்டான uidai.gov.in-விற்கு செல்லவேண்டும். அதன்பிறகு ஆதார் என்ரோல்மென்ட் ஃபார்மை டவுன்லோட் செய்யவும். அதில் உள்ளவற்றை தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யவும். ஆதார் என்ரோல்மென்ட் சென்டருக்கு சென்று இந்த படிவத்தை சமர்ப்பிக்கவும். அங்கே உங்களுடைய புதிய புகைப்படத்தை எடுத்து கொள்ளலாம். இதற்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.100 செலுத்த வேண்டும்.
அதன்பின்னர், உங்கள் விவரங்களை அங்கீகரிக்க நீங்கள் பயோமெட்ரிக்ஸை வழங்கவேண்டும். இதைத் தொடர்ந்து நீங்கள் ஒப்புகைச் சீட்டை மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை பெறுவீர்கள். URN மூலம் உங்கள் ஆதார் கார்டில் செய்ய கோரி உள்ள அப்டேட்டை நீங்களே கண்காணிக்கலாம். ஆதார் கார்டில் உங்களது புதிய போட்டோவை உடனடியாக மாறிவிடாது. புதிய போட்டோ ஆதார் கார்டில் அப்டேட்டாக அதிகப்பட்சம் 90 நாட்கள் வரை ஆகலாம். உங்கள் ஆதார் கார்டில் நல்ல போட்டோ வேண்டும் என்றால் நீங்கள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.