5-ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்த பிறகு பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு, கல்வித் தகுதி உள்ளிட்டவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு:
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. ஆனால், தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து போட்டி தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி கொண்டு வருகிறது. அதோடு, அரசும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தேனி மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தப் பணிக்கு, விண்ணப்பிற்க தகுதியும் விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் 32 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆனால், SC/SCA/ST பிரிவினராக இருப்பின் 5 ஆண்டுகளும் அத்துடன் BC/MBC/DNC பிரிவினராக இருப்பின் 2 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு ரூ.11,100 முதல் ரூ. 35,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் விருப்பம் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2022/04/2022042654.pdf என்ற லிங்கை கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்யப்பட்ட பிறகு வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு வருகிற மே மாதம் 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை பெற மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.