அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு: 10ஆம் வகுப்பு படித்தவர்கள்... 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்... மே 17 கடைசி நாள்..!
அஞ்சலக ஆயுள் காப்பீட்டு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீட்டு முகவர் பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மே 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் அனுப்பும்படி தபால் துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு:
அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் என்பது இந்திய அஞ்சல் துறையால் உருவாக்கப்பட்ட பழமையான தபால் தலை காப்பீட்டு திட்டமாகும். தற்போது, அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு ஆகிய காப்பீடுகளுக்கு, முகவர் பணிக்கான பணியிடங்களை அஞ்சல் துறை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய வங்கிகள் காப்பீட்டு முகவர் பணிக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட முகவரியில் வசிக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தப்பணிக்கு, 18 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்ச்சியில் தேர்வில் வெற்றிபெற்ற, வேலைவாய்ப்பற்ற சுயதொழில் செய்வோர், முன்னாள் ஆலோசகர்கள், ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் இராணுவத்தினர், அங்காடி மற்றும் மண்டல பயனாளர்கள் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள், சுய உதவிக் குழுக்களை செயல்படுவோர், கிராமத்தலைவர், கிராம சபை உறுப்பினர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மேலும், பாலிசியில் பிரீமியம் அடிப்படையில் கமிஷனும் வழங்கப்படும். இதில், தேர்வாகிற தேர்வாளர்கள் மட்டும் ரூ.5 ஆயிரத்தை காப்பீட்டுத் தொகையாக, தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அருகில் உள்ள அலுவலகங்களில் செலுத்தவேண்டும். ஏஜென்சி காலம் முடியும்போது அந்த முழுத்தொகையும் வட்டியுடன் அந்த சந்தாதாரர்களுக்கு திருப்பி வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அருகே உள்ள அலுவலகங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வரும் மே 17ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி - 628501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், இதுகுறித்த விவரங்களை தெரிய விரும்பினால் 04632-220368, 04636- 222313 இந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.